தற்போது தொலைக்காட்சிகளில் ரின் சலவை தூளுக்கான விளம்பரம் அதிகமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
அதில், "2 பெண்மணிகள் பள்ளி பேருந்துக்காக காத்திருக்கும் போது ஒருவரின் கூடையில் டைடு சலவைத் தூளும், மற்றொருவரின் கூடையில் ரின் தூளும் இருக்கும். ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர். டைடு சலவைத் தூள் வைத்துள்ள பெண், அருகில் நிற்கும் பெண்ணை பார்த்து இதில் வாசனையும் இருக்கு... வெண்மையும் இருக்கு... என்கிறார். ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பும் போது பள்ளி வேனிலிருந்து இவர்களது இரு பிள்ளைகளும் வருகின்றனர். இருவரும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்திருக்கின்றனர். டைடு பிராண்டை உயர்த்திப் பேசிய பெண், தனது மகனின் உடை மங்கலாக இருப்பதையும், இன்னொருவரின் சீருடை பளிச்சென இருப்பதையும் பார்த்து ஆச்சரியப்படுகிறார். மம்மி ஏன் ஆன்ட்டி ஆச்சரியத்துடன் பார்க்கிறாங்க... "என்று கேட்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இப்போது 'டைடு'-ஐ விட வெண்மையை தரும் ரின். ஆச்சரியப்படும் விலையில் என்று விளம்பரம் வருகிறது.
சந்தையில் தனது பொருளின் விற்பனைக்காக ஒரு வித்தியாசமான கோணத்தில் விளம்பரம் செய்யப்படுவது உண்டு. யாரும் நேரடியாக ஒரு பிராண்டை விட தங்களது உயர்ந்தது என்று செய்யமாட்டார்கள். எந்த நிறுவனமும் இப்படி ஒப்பீடு செய்து விளம்பரம் செய்வதில்லை. ஆனால், சமீபத்தில் ரின் இப்படி ஒரு விளம்பரத்தை ஆரம்பித்து நேரடியாக மோதல் போக்கை கடைப்பிடிக்க தயாராகிவிட்டது.
தற்போது தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களில் ஆபாசம் பெருகி வருகிறது. எப்படியாவது தனக்கென்று ஒரு சந்தையை பிடித்து விட போட்டி போட்டு விளம்பரம் செய்து வருகிறார். இதனால் எப்படி வேண்டுமானாலும் விளம்பரம் செய்யலாம் என்ற நோக்கில் பொய்யை புகுத்தி வர்த்தக விளம்பரங்களை எடுக்கிறார்கள்.
அதற்கு ஓர் உதாரணம் தான் ஹார்லிக்ஸ் விளம்பரம். "போருக்கு போகும் போது அலெக்சாண்டருக்கு மெமரி லாசாயிருந்தா?" என்றும், "ஐன்ஸ்டீன் அசந்து தூங்கிட்டாருன்னா?" என்றும் அவர்களை கேவலப்படுத்தி விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.
அந்த காலத்தில் எந்த ஹார்லிக்ஸ் இருந்தது. அவர்கள் எப்படி தங்களது திறமைகளை நிரூபித்தனர். யார் மனதையும் புண்படுத்தாமல் விளம்பரம் செய்ய இந்த விளம்பர நிறுவனங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
போட்டி என்பது தாங்கள் தயாரிக்கும் பொருளின் தரத்திலும், விலையிலும் காட்ட வேண்டும். அதுவே அவர்களுக்கு உயர்ந்த மார்க்கெட்டை பிடித்துக் கொடுக்கும். கவர்ச்சிகரமாக யோசிக்கிறேன் பேர்வழி என்று பொய்யையும், ஆபாசத்தையும், மோதலையும் புகுத்தாதீர்கள்....
அதை அரசும் கண்காணித்து தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களுக்கு தணிக்கையை அமல்படுத்த வேண்டும்.

4 comments:
miga sari..
unga blog romba nalla iruku
High Definition Youtube Video Download Free
visit 10 to 15 Website and EARN 5$
CineMa Tickets Booking Online
டைடு கம்பெனியை ரின் விலைக்கு வாங்கியிருக்கலாம். நன்றாக விசாரித்துப் பாருங்கள்.
சிவா சென்னை.
டைடு கம்பெனியை ரின் விலைக்கு வாங்கவில்லை... வழக்கு தொடர்ந்திருப்பதாக எக்னாமிக் டைம்ஸ்-ல் செய்தி வந்துள்ளது. இதை உறுதிப்படுத்திய பிறகே செய்தி வெளியிட்டேன்.
Post a Comment