இந்த உரையின்போது, "பொருளாதார சரிவிலிருந்து இந்தியா மீண்டுள்ளதாகவும்; மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதே இலக்கு என்றும், விலை உயர்வு குறித்து கவலை குறித்து இந்த அரசு கவலைப்படுவதாகவும், விலை உயர்வை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், வரும் ஆண்டிற்குள் இந்த உயர்வு குறையும் என்று இந்த அரசு நம்புகிறது. பொது விநியோகத் திட்டத்தை நவீனமயமாக்கப்படுத்தவும், கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தவும், உணவு பாதுகாப்பை ஏற்படுத்துவதே இந்த அரசின் இலக்காகும். உள்நாட்டு உற்பத்தி விகிதம் 10 சதத்தை எட்டும் என்றும், நேரடி வரிச் சீர்திருத்த சட்டம் நிறைவடையும் தறுவாயில் உள்ளது என்றும்" மத்திய நிதியமைச்சர் கூறினார்.
மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள அம்சங்களில் முதலாவதாக பொதுத்துறை பங்குகளில் 25 ஆயிரம் கோடி அளவுக்கு விற்பதென்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் இந்திய நாட்டின் சொத்துக்கள் சூறையாடப்படுகிறது என்பது மிகவும் தெளிவாகிறது. ஒருவன் வருவாய்க்கான தனது சொத்துக்களை விற்று செலவு செய்துவிட்டால், வருவாய் பெருகிவிடுமா? இதுபோன்ற செயலைத்தான் இந்திய அரசாங்கம் தற்போது செய்து வருகிறது.
நாட்டில் கணக்கில் வராத கறுப்பு பணம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு உள்ளது. இந்த பணம் குறித்து வாய் திறக்கமாட்டார்களா? சாதாரண விவசாயியிடம், சிறு - குறு வியாபாரிகளிடம் வரி செலுத்தாத, கடன் கட்டாதவர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க முனைந்த இந்த அரசு, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வரி ஏய்ப்பு மூலம் ஏமாற்றி வருபவர்கள் மீது இந்த அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டது.
நமது இந்திய நாட்டின் ஓரே நிதி வரவின் ஆதாரமாக விளங்குவது பொதுத்துறை தான். அதை விற்பது என்பது ஒரு மனிதன், தனது தேவைக்காக கண், கிட்னியை விற்றுச் சாப்பிடுவதற்கு சமம். இதைத்தான் இந்த அரசாங்கம் செய்கிறது.
இரண்டாவதாக, பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி 10 சதமாகவும், கச்சா எண்ணெய்க்கு 5 சதமாகவும், உற்பத்தியின் மீது வரி உயர்வு என ஏழை, எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் வகையில் உயர்த்தியுள்ளது.
பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரி உயர்வின் காரணமாக அனைத்து கட்டணங்களும், விலைகளும் கடுமையாக உயரும். ஏனென்றால் இந்த ஒவ்வொரு பொருளுக்கு போக்குவரத்து மிக இன்றியமையா தேவையை என்பதை இந்த அரசு ஏன் உணர மறுக்கிறது. இதனால் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏற்கெனவே அவதிப்பட்டு வரும் மக்கள் மேலும் அல்லலுற நேரும். அது சரி சாதாரண மக்களுக்கான பட்ஜெட்டாக இருந்தால்தானே இதைப் பற்றியெல்லாம் யோசிப்பார்கள்? இந்த விஷயத்தில் அனைத்து எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் எதிர்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளன. நாடாளுமன்றத்திலும் வெளிநடப்பு செய்துள்ளன.
அடுத்து, நாட்டின் மக்கள் தொகைக்கு உயர்ந்து கொண்டே வருகிறது. இப்படிப்பட்ட நேரத்தில் சிறு, சிறு ஒதுக்கீடுகள் உயர்வு என்று இந்த அரசு மாய்மாலம் காட்ட முற்படக்கூடாது. கல்வி, சுகாதாரம் இவையெல்லாவற்றுக்கும் இன்றைய தேவைக்கு இது பற்றாக்குறையாகவே இருக்கும்.
பல்வேறு நிதி நிறுவனங்கள் மோசடிகளிலும், ஏமாற்று வேலைகளிலும் இறங்கியுள்ள இக்காலங்களில், தனியார் வங்கிகளுக்கு அனுமதி தரப்படும் என்பது வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்றதாகும்.
வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. அவுட்சோர்ச்சிங் எனப்படும் வேலைகளை அளித்து வந்த அமெரிக்கா அந்த முறைகளை ஒழித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்தும், அவர்களின் மேம்பாடு குறித்தும் ஒரு துளிக் கூட வாய் திறக்கவில்லை இந்த பட்ஜெட். ஊரக வேலைவாய்ப்புகளும் அதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஏழை - சாதாரண மக்களுக்கு ஒவ்வாத பட்ஜெட்.
'என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்; ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்' என்று ஒரு எம்ஜிஆர் அவர்கள் நடித்த ஒரு பாடல் உள்ளது. சுயவேலை வாய்ப்பு திட்டத்திற்கு இந்த அரசு நமது நாட்டின் வளங்களை பயன்படுத்தி வேலைவாய்ப்பு அளிக்கவாவது இந்த அரசு முயற்சித்திருக்கலாம். எதுவும் இல்லாத இல்லை என்பது மிகவும் வருத்ததிற்குரியது.
2010- 11ம் ஆண்டு பட்ஜெட்டின் சாராம்சங்கள் வருமாறு:
உரங்கள் மீது மானியம் குறைப்பு
- பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து ரூ. 25,000 கோடி பெறுமான பங்குகளை விற்க முடிவு
- உரங்கள் மீதான மானியம் குறைக்கப்படும்
- உணவுப் பற்றாக்குறையை தனியார் துறை உதவியோடு முடியடிப்படும்
வரி உயர்வுகள்
- பெட்ரோலிய கச்சா எண்ணெய் மீது மீண்டும் 5 சதவீத கலால் வரி
- பெட்ரோலிய பொருட்கள் மீதான சுங்க வரி லிட்டருக்கு 1 ரூபாய் அதிகரிப்பு
- பெட்ரோலிய விலைகள் குறித்த பாரிக் கமிட்டி பரிந்துரையை அமலாக்க யோசனை
- டிவி, பிரிட்ஜ், ஏசி உள்ளிட்டவற்றின் விலை உயரும்
- தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரி உயர்வு; தங்கத்திற்கு 10 கிராமுக்கு ரூ. 300 சுங்க வரி விதிக்கப்படும்.
- அதிகபட்ச சுங்க வரி 10 சதவீதமாக தொடரும்.
- பெரிய, ஏ.சி. கார்களுக்கு சுங்க வரி 22 சதவீதமாக உயர்வு
- ஏற்றுமதி வரி 8 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிப்பு
- சிகரெட் மற்றும் புகையிலை மீதான சுங்க வரி அதிகரிப்பு
வரி சலுகைகள்
- விவசாய விதைகள் மீதான வரி முழுமையாக விலக்கு
- சிடி, செல்போன் உள்ளிட்டவற்றின் விலை குறையும்
- தனியார் நிறுவனங்கள் மீதான கூடுதல் வரி குறைப்பு
- நீண்டகால அடிப்படைக் கட்டமைப்புத் திட்ட பத்திரங்களில் முதலீடு செய்தால் ரூ. 20,000 முதலீடு செய்தால் வரி சலுகை கிடைக்கும்.
- ஆன்லைன் செய்தி நிறுவனங்களுக்கு சேவை வரி குறைப்பு
- ரூ. 20 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 1 சதவீத வட்டிச் சலுகை
தனிநபர் வருமான வரி
- தனிநபர் ஆண்டு வருமானம் ரூ. 1.6 லட்சம் வரை உள்ளவர்களுக்கு முழு வரி விலக்கு
- தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1.6 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 10 சதவீதம் வரி
- தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 20 சதவீதம் வரி
- தனிநபர் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சம் மேல் உள்ளவர்களுக்கு 30 சதவீதம் வரி
- வருமான வரி சலுகையால் ரூ. 26,000 கோடி இழப்பு ஏற்படும்
மகளிர் நலனுக்கு ரூ.22,300 கோடி
- பாதுகாப்புத் துறைக்கு ரூ. 1.47 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
- ஒருங்கிணைந்த தேசிய அடையாள அட்டை திட்டத்துக்கு ரூ. 1,900 கோடி
- பெண் விவசாயிகள் நலத் திட்டத்துக்கு ரூ. 100 கோடி
- சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ. 2,600 கோடி
- ரூ. 1000 கோடியில் அமைச்சாரா தொழில் பிரிவினருக்கான சமூக பாதுகாப்பு நிதியம்.
- ஊரக வளர்ச்சிக்கு ரூ. 66,000 கோடி ஒதுக்கீடு
- மகளிர், குழந்தைகள் நலனுக்கு ரூ.22,300 கோடி
காப்பீட்டு திட்டம் அறிமுகம்
- தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ. 40,100 கோடி ஒதுக்கீடு
- தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணியாளர்களுக்கு 'ஸ்மார்ட் கார்ட்' அறிமுகம்
- தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டம் அறிமுகம்
- நகர்ப்புற வளர்ச்சி, நகர்ப்புற ஏழைகள் நலனுக்கு ரூ. 5,400 கோடி
- இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ. 10,000 கோடி
- புந்தல்கந்த் வறட்சி நிவாரணத்திற்கு ரூ. 1200 கோடி நிதியுதவி
கல்விக்கு ரூ.22,300 கோடி
- பாரத் நிர்மாண் திட்டத்திற்கு ரூ. 48,000 கோடி
- பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கு ரூ. 31,600 கோடி
- சுகாதாரத் துறை திட்டங்களுக்கு ரூ. 22,300 கோடி
- மின் சக்தித் துறைக்கு ரூ. 5,130 கோடி
- சாலை கட்டமைப்பு வசதியைப் பெருக்க ரூ. 19894 கோடி
- அடிப்படைக் கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கு ரூ. 1.73 லட்சம் கோடி
- மரபு சாரா எரிசக்தித் திட்டங்களுக்கு ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு.
- திருப்பூர் சாயப்பட்டறை கழிவுநீர் சுத்திகரிப்புக்கு ரூ.200 கோடி
- வட கிழக்கில் விவசாயத்துறையை ஊக்குவிக்க ரூ. 400 கோடி நிதியுதவி
பற்றாக்குறை 5.5 சதவீதம்
- விவசாயக் கடன்களுக்கு 2 சதவீத மானியம்
- 2022ம் ஆண்டில் 20,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய இலக்கு
- ரூ. 15 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு கட்டாய தணிக்கை
- 2000 மக்கள் தொகை கொண்ட எல்லா கிராமங்களிலும் வங்கிகள் திறக்கப்படும்
- மோனோ ரயில்களுக்கு இறக்குமதி திட்ட அந்தஸ்து
- இந்த ஆண்டு நிதிப் பற்றாக்குறை 5.5 சதவீதமாக உள்ளது
- உணவுப் பாதுகாப்பு சட்ட மசோதா தயார்
- திட்ட செலவுகள் 15 சதவீதம் அதிகரித்துள்ளது
- மொத்த வரி வருமானம் ரூ. 7.46 லட்சம் கோடியாக இருக்கும்
வங்கியில் தனியார்
- குறைந்த விலை வீடுகளுக்கான மானியம் நீட்டிப்பு. குடிசையில்லா நகர்களை உருவாக்க திட்டம்
- நடப்பு பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக உள்ளது
- அதிக தனியார் வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
- வங்கித் துறையில் தனியாரை ஊக்குவிக்க நடவடிக்கை
- சில்லறை வர்த்தகம் தொடர்பான உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
- 2011ம் ஆண்டில் ரூ. 3.75 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு.
- 5 மாபெரும் உணவுப் பூங்காங்கள் அமைக்கப்படும்
- தினந்தோறும் 20 கி.மீ புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்
- அதிக பொருளாதார மண்டலங்கள் அமைக்க திட்டம்
4 அம்ச திட்டம்
- வறட்சி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு
- விவசாய வளர்ச்சிக்கு 4 அம்ச திட்டம்
- 2 மாதங்களில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்
- வெளிநாட்டு நேரடி முதலீட்டு கொள்கை மேலும் எளிமையாக்கப்படும்.
- நேரடி வரிகள் தொடர்பாக ஏப்ரல் 1ம் தேதி முதல் புது திட்டம்
- அரசுச் செலவீனங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்


1 comment:
//*பொதுத்துறை பங்குகளில் 25 ஆயிரம் கோடி அளவுக்கு விற்பதென்று அறிவித்துள்ளார்.*//
இதனால் ஒரு பயனும் இல்லை. எப்படியும் பொதுத் துறை நிறுவனங்கள் இலாபத்தில் இயங்கப் போவது கிடையாது. அந்நிய முதலீட்டாளர்கள் பிடியில் நம் பொதுத் துறை நிறுவனமும் சென்று விடும். இப்போதே பங்குச் சந்தையை ஆட்டு விப்பது அவர்கள் தான். இனி சொல்லவே தேவையில்லை.
Post a Comment