"கடந்த 20 ஆண்டுகளாக என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு ஏற்றங்களில், இறக்கங்களிலும் உறுதுணையாக இருக்கும் இந்திய நாட்டு மக்களுக்கு இரட்டை சதத்தை அர்ப்பணிக்கிறேன். இரட்டை சதத்தை நினைத்து நான் ஆடவில்லை. ஆனால், 42வது ஓவரில் 175 ரன்களை எட்டியபோது தான் அதற்கான வாய்ப்பு இருப்பதாக உணர்ந்தேன். அடுத்து ஒரு இந்தியனே எனது சாதனையை முறியடிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்" ஒருநாள் ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்த உற்காத்தில் சச்சின் கூறினார்.
மத்தியப்பிரதேசம் மாநிலம் குவாலியரில் 2வது ஒருநாள் ஆட்டத்தில் இந்த சாதனையை நிகழ்த்தினார். 147 பந்துகளில், 6 சிக்சர்களும், 25 பவுண்டரிகளும் அடித்து ஆட்டமிழக்காமல் 200 ரன்களை எடுத்து உலக சாதனையை நிகழ்த்தினார்.
இந்த சாதனையின் மூலம் அவர் இந்தியாவுக்கு பெருமையை தேடி தந்துள்ளார். கர்வமில்லாமல் அடுத்து இந்த சாதனை இந்த மண்ணில் இந்தியர்களால் ஏற்பட வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருந்துள்ளது.
இதற்கு முன்னர் 2009ல் ஜிம்பாப்வே உள்ள புலவாயோவில் நடந்த ஜிம்பாப்வே அணி வீரர் கவன்ட்ரி 194 ரன்களும், 1997ல் சென்னையில் நடந்த பாகிஸ்தான் அணி வீரர் அன்வர் ஆட்டமிழக்காமல் 194 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை நேற்று (பிப்ரவரி 25) சச்சின் முறியடித்தார்.
தோல்வியை சந்திக்கும் போது குட்டுவதும், சாதனை புரியும்போது பாராட்டுக்களை அள்ளுவதும் ஊடகங்களில் தொடர்ந்து நிகழ்கிறது. அனைத்தையும் கடந்து தனது சாதனையை புரிந்துள்ளார் சச்சின்.
கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நிகழாத சாதனையை புரிந்ததன் மூலம் சச்சின் நமக்கெல்லாம் பெருமைத் தேடி தந்துள்ளார். அவரது இந்த பயணம் மேலும் வளரவும், பல்வேறு இளைஞர்களுக்கு அவர் ஒரு மாதிரியாக இருக்கவும் நமது வாழ்த்துக்கள்.
அவரது இந்த சாதனைக்கு வியாழனன்று கூடிய நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பிரதிபா பாட்டீல் புதனன்று விடுத்த வாழ்த்து செய்தியில், "எவரெஸ்ட் சிகரத்தை எட்டியதுபோல இந்த சாதனையை செய்திருப்பதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றின் சாதனை புத்தகத்தை தெண்டுல்கர் மீண்டும் ஒரு மாற்றி எழுதியிருக்கிறார். எதிர்கால சந்ததியினருக்கு கடினமான இலக்கை நிர்ணயித்து இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன்சிங் உள்பட நாட்டின் பல்வேறு தரப்பிலிருந்தும் சச்சினுக்கு வாழ்த்து மழை பொழிந்துள்ளது.
வாய்ப்புகள் அமைந்தால்தான் ஒருவன் உயர்ந்த இடத்தை அடைய முடிகிறது. அந்த வாய்ப்பை நழுவ விடுபவன் முன்னேறாமல் பாதளத்தில் மூழ்கி கிடக்கிறான். அந்த வகையில் சச்சின் தனது வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி நாட்டின் கவுரவித்திற்கு மகுடமாக விளங்குகிறார். அதற்காக நாம் பெருமிதம் கொள்வோம்...!


2 comments:
Please pay attention on stats.
Sachin hit only 3 sixers and bulavayo is in zimbabwe .
Not to mention u r wrong , but just a suggestion
thanks. iam corrected
Post a Comment