February 24, 2010

இருக்கு.... ஆனா இல்லை....?!

2010-11ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் புதனன்று (பிப்ரவரி 24) மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்தார். உலகில் முதல் பெறும் அரசுத்துறையாக கருதப்படும் பட்ஜெட் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த பட்ஜெட்டில் நிகர லாபமாக ரூ.1,328 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் பெரும் வருவாயில் இந்த ரயில்வே மூலம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்ல, இதன் சேவை இன்னும் விரிவுபடுத்தப்பட்டால் ஏராளமான வருவாயை திரட்ட முடியும் என்றும், பயணிகளுக்கு நல்ல சேவையை வழங்க முடியும் என்பதும் காலம் நிரூபித்து வருகிறது. கோடிக்கணக்கானவர்களுக்கு இதன்மூலம் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட சேவை துறையை தற்போது மம்தா அறிவித்துள்ள பட்ஜெட்டில் தனியாருக்கு 100 நாட்களில் பங்குகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசின் மூலம் என்றால் லாபம் மட்டுமே என்ற குறிக்கோளுடன் சேவையும் இணையும்.

இதுவே தனியார் கையில் என்றால் லாபம் மட்டுமே குறியாகவே இருக்காதா?
மற்றொரு விஷயம், பாதுகாப்பு முன்னாள் இராணுவ வீரர்களை பயன்படுத்துவது என்று அறிவித்துள்ளார். இது வேலையில்லா திண்டாட்டம் பெருகியுள்ள நிலையில் இந்த வாய்ப்பை ஏன் இளைஞர்களுக்கு தரக் கூடாது.
ரயில்வே தனியார்மயம் ஆக்கப்படமாட்டாது என்று அறிவித்து கொண்டே சரக்கு ரயில் தனியாரே இயக்க அனுமதி, ரயில்வே பங்குகளில் இணைந்து செயல்பட அனுமதி என்று அறிவிக்கிறார். அது இந்த நாட்டின் வருவாயை கடுமையாக குறைப்பது மட்டுமின்றி வேலைவாய்ப்பையும் பறித்துவிடும் என்பது தெளிவான உண்மை.
வடிவேல் காமெடியில் 'வரும்.. ஆனா வராது' என்பது போன்று குழப்பிக் கொண்டே தனியாரை நோக்கி பீடுநடை போடுகிறார் என்பது என்பது தெரிகிறது. அதே நேரத்தில் நாட்டின் பெரும் பகுதி மக்கள் செல்லும் அன்ரிசர்வ் குறித்து வாய் திறக்காத மம்தா, ஏ.சி. கோச், படுகை வசதிக்கு கட்டணம் குறைப்பு நடந்துள்ளது. இது இந்த பட்ஜெட் யாருக்காக என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
மேலும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்பதும், அறிவிக்கப்பட்ட 286 திட்டங்களில் 143 திட்டங்கள் பின்தங்கிய பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை தனியார் ஏற்றுக் கொள்வார்களா என்ற கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளன.

2010 - 11ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
  • கடந்த 2009-10ம் ஆண்டின் மொத்த வருவாய் ரூ.88,281 கோடி.
  • ரயில்வேயின் நிகர லாபம் ரூ. 1,328 கோடி
  • புதிய ரயில் பாதைகள் அமைக்க ரூ. 4,411 கோடி
  • 2011ம் ஆண்டில் மத்திய அரசுக்கு ரயில்வே ரூ. 6,608 கோடி டிவிடெண்ட்
  • சிக்கன நடவடிக்கை மூலம் ரூ. 2,000 மிச்சம்
  • அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.1302 கோடி

கட்டண உணர்வு இல்லை
பயணிகள், சரக்கு கட்டணங்கள் உயர்வு இல்லை
உணவுப் பொருட்கள், மண்ணெண்ணெய் கொண்டு செல்லும் சரக்குப் பெட்டிகளின் கட்டணம் ரூ. 100 குறைப்பு
ஏசி பெட்டி ரயில் கட்டணம் மீதான சேவை வரி ரூ. 40ல் இருந்து ரூ. 20 ஆகக் குறைப்பு
ரயில்வே ஊழியர்களுக்கு புதிய வீட்டு வசதி திட்டம்; சிறப்பு காப்பீட்டுத் திட்டம்

5 புதிய ரயில் பெட்டி தொழிற்சாலைகள்
  • அடுத்த 10 ஆண்டுகளில் 25,000 கி.மீ புதிய பாதை அமைக்க இலக்கு
  • 2012க்குள் ரே பரேலியில் புதிய ரயில் பெட்டி தொழிற்சாலை; 5 புதிய ரயில் பெட்டி தொழிற்சாலைகள் அமைக்கப்படும்
  • சிறப்பு அதிவிரைவு ரயில் பாதைகள் அமைக்கப்படும்
  • காரக்பூரில் ரயில்வே ஆராய்ச்சி மையம்
  • அம்பாலா, திருவனந்தபுரம், அமேதி, நாசிக் உள்ளிட்ட 6 இடங்களில் ரயில்வே குடிநீர் தொழிற்சாலைகள்
  • 93 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்படும்
  • 7 மாதங்களில் 117 புதிய ரயில்கள்
  • 16 புதிய சுற்றுலா ரயில்கள் அறிமுகம்
  • மும்பைக்கு 101 புதிய புறநகர் ரயில்கள், இந்த ஆண்டிலேயே 54 ரயில்கள் அறிமுகம்

மகளிர், சிறுபான்மையோருக்கு சலுகை
  • 16 இடங்களை இணைக்கும் 'ரவீந்திரநாத் தாகூர்-பாரத் ப்ரீத் எக்ஸ்பிரஸ்' அறிமுகம்
  • சலுகை கட்டணத்துடன் உள்ள வேலைக்குச் செல்வோருக்கு 'கர்ம பூமி' எக்ஸ்பிரஸ்
  • சிகிச்சைக்கு செல்லும் புற்று நோயாளிகளுக்கு ஏசி மூன்றடுக்கு பெட்டி, இரண்டாம் வகுப்பில் இலவச பயணம்
  • ரயில் பாதை மூலம் வங்கதேசத்தை இணைக்க திட்டம்
  • ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவில் பெண்கள்
  • விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் கூடுதல் வேலைவாய்ப்பு
  • மும்பை-ஹவுராவில் லேடீஸ் ஸ்பெஷல் மாத்ரு பூமி ரயில்கள்
  • புனிதத் தலங்களை இணைக்கும் 'பாரத தீர்த்த யாத்திரை ரயில்கள்' அறிமுகம்
  • சிறுபான்மையோர் மற்றும் மகளிருக்கு ரயில்வே தேர்வு கட்டணம் ரத்து

2 இரண்டு அடுக்கு ரயில் சேவை அறிமுகம்
  • ரயில்வே தேர்வு ஆங்கிலம், இந்தி, உருது மொழிகள் நடத்தப்படும். மாநில மொழிகளிலும் நடத்த யோசனை
  • சென்னை பெரம்பூர், சித்தரஞ்சன் ரயில் பெட்டி தொழிற்சாலைகள் நவீனமயமாக்கப்படும்
  • ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்.கள், மருத்துவமனைகள், கோர்ட்டுகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் இ- டிக்கெட் வசதி
  • மாவட்ட தலைநகர்கள், பஞ்சாயத்துகளில் டிக்கெட் கவுன்ட்டர்கள்
  • தில்லியிலும், கொல்கத்தாவிலும் சோதனை அடிப்படையில் 'டபுள் டெக்கர்' என்ற இரண்டு அடுக்கு ரயில்கள் அறிமுகம்
  • ரயில்வே பார்சல்களை வீடுகளிலேயே டெலிவரி செய்ய திட்டம்
  • ரயில்வேக்காக நிலம் தரும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை; வலுக்கட்டாயமாக நில ஆக்கிரமிப்பு கிடையாது
  • ரயில்வே சார்பில் பாட்டில் நீர் தயாரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்

5 விளையாட்டு பயிற்சி மையங்கள்
  • நிலம் கிடைத்தால் மே.வங்கத்தில் ரயில்வே டீசல் மையம் அமைக்கப்படும்
  • ரயில்கள் மோதலை தவிர்க்க நவீன கருவிகள், சிக்னல்கள் மேம்படுத்தப்படும்
  • சென்னை, ஹைதராபாத், தில்லியில் உள்ளிட்ட 5 விளையாட்டு பயிற்சி மையங்கள்
  • ரயில்வே பாதுகாப்பில் முன்னாள் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவர்
  • ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளில் 14,000 பணியாளர்கள் நியமனம்; 5 ஆண்டுகளில் ரயில்வே ஆள் இல்லா கிராசிங்குகள் ஒழிக்கப்படும்
  • தில்லி காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு சிறப்பு ரயில்கள்
  • ரயில் நிலையங்களில் குறைந்த விலை குடிநீர், அடுக்கு மாடி கார் நிறுத்தங்கள்
  • ரயில்வேயில் தனியார் திட்டங்களை ஊக்குவிக்க தனிக் குழு

தனியாருக்கு அனுமதி
  • 100 நாட்களில் தனியார் திட்டங்களுக்கு அனுமதி; அதே நேரத்தில் ரயில்வே தனியார்மயம் கிடையாது
  • தனுஷ்கோடி மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவைக்கு ஆய்வு
  • மதுரை- மும்பை மார்க்கத்தில் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் விடப்படும்.
  • சென்னை- கோவை இடையே அதி விரைவு பகல் நேர துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது
  • 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சரக்கு போக்குவரத்து வருவாய் ரூ.62 ஆயிரத்து 489 எதிர்பார்க்கப்படுகிறது
  • நடப்பு நிதியாண்டில் சரக்கு போக்குவரத்து வருவாய் ரூ. 58 ஆயிரத்து 715.44 கோடி.
  • ரயில் போக்குவரத்து மற்றும் பயணிகளின் சேவைகளை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு மொத்தம் ரூ.41,426 கோடி ஒதுக்கீடு; இதில் ரூ.4, 411 கோடி புதிய ரயில் பாதைகளுக்கும், ரூ. 1,302 கோடி பயணிகளின் வசதிகளுக்காகவும் செலவிடப்படும்.
  • 2010-11ம் ஆண்டில் ஏற்றப்படும் சரக்கு இலக்கு கடந்த ஆண்டைக்காட்டிலும் 54 மில்லியன் டன் அதிகரிக்கப்பட்டு, 944 மில்லியன் டன் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • புதிய ரயில் பாதைகள் அமைப்பதற்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட ரூ.2,848 கோடி, தற்போது ரூ.4,411 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • 2010-11ம் ஆண்டுக்கான மொத்த செலவினங்கள் ரூ.87,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments: