ஒவ்வொரு படத்திலும் தன் கதையை நம்பியே படம் பண்ணும் இயக்குநர் பாலாவின் அடுத்த படம் "அவன் - இவன்". நடிகர் விஷால், நடிகை ஜெலினியா ஐயர் உள்பட பலர் நடிக்கின்றனர்.
இப்படக் குழுவினரின் செய்தியாளர் சந்திப்பின்போது இயக்குநர் பாலா பேசியதாவது:
இல்லாத ஒன்றுக்காக நன்றி சொல்ல விரும்பவில்லை. என் படம் எடுக்கப்பட்ட போது கடவுள் என் கூட இல்லை. நடிக்கும் போது எப்படி எப்போதும் இல்லாத கடவுளுக்காக நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும். எனக்கு கிடைத்த தேசிய விருது எங்கள் உழைப்பினால் வந்தது. அவர்களுக்கும் நன்றி.
இதற்கு மற்றொரு காரணம் உங்களால்தான். உங்களுடைய விமர்சனம்; நீங்கள் எழுதியதை வைத்துதான் விருதுக்கு பரிந்துரைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
என் படங்களில் சிறிது காமெடி இருக்கும். இந்த படத்தில் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அவ்வளவுத்தான். முழு காமெடி படம் கிடையாது. நான் எடுத்த மற்றப்படங்களை விட கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
நான் தமிழ் படங்கள் பார்ப்பதில்லை. பாலா தமிழ் படங்கள் பார்ப்பதில்லையாம் என்று நீங்கள் எழுதலாம். நான் ஆங்கில படங்களும் பார்ப்பதில்லை. வீட்டில் சி.டி. மூலம் பார்க்க முடியாது. தியேட்டருக்கு போனால் எந்தநேரமும் செல்போனிலேயே பேசுகிறார்கள். இதனால் கோபப்பட்டு அடித்து விடுவேனோ என்ற பயத்தின் காரணமாகவே நான் செல்வதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல் படத்திலேயே தான் ஒரு வித்தியாசமான இயக்குநர் என்பதை நிரூபித்த பாலா, இதுவரை கதையை நம்பி வந்திருக்கிறார். அதிலே எந்த மாற்றமும் கிடையாது.
தான் தேசிய விருது பெற்றது தன் உழைப்பு, தன்னுடன் பணியாற்றியவர்களின் உழைப்பு என்று உணர்ந்த பாலா அவர்களுக்கு நன்றி சொல்வதும் தனி சிறப்பே!
கடைசியாக முடிக்கும் போது தான் தியேட்டருக்கு செல்லாததற்கு காரணமாக கூறப்பட்டிருப்பது வேதனையானது. நல்லப் படங்கள் கொடுக்கப்பட்டால் யார் செல்லில் பேசிக் கொண்டிருப்பார்கள். தரமான படங்கள் வராததற்கு பார்ப்பவர்களின் குற்றமா? இதை ஏன் பாலா உணர மறுக்கிறார்.
தன் கவனம் முழுவதும் சிதறியதற்கு இவர்தான்காரணமே தவிர; மற்றவர்கள் அல்ல. பொது இடங்களில் இது போன்று பேசுவது நல்ல கலைஞனுக்கு அழகல்ல.
ஒது ஒரு சாதாரண விஷயம். உலகத்தில் எவ்வளவு பிரச்சனைகள் உள்ளன. அவற்றின் தங்கள் கோபம் செல்லமாட்டீங்கிறது. நீங்கள் பெரும்பாலானவர்கள் கோபப்பட வேண்டிய விஷயத்தில் மவுனமே காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இனிமேலாவது, பொது இடங்களில் சொல்லும் சொல் சரியான பிரயோகிக்கவும். இது வளரும் கலைஞர்களுக்கும், வளர்ந்த கலைஞர்களுக்கும் நல்லது.
அமெரிக்கர்கள் இந்தியாவில் விருது வாங்கும் காலம் வர வேண்டும்: கமல்வேலுர் விஐடியில் கலை மற்றும் விளையாட்டு நிறைவு விழா கமலஹாசன் கலந்து கொண்டார். அப்போது மாணவ - மாணவியர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தாவது:
நான் ரோல் மாடலாக நிறைய பேரை நினைக்கிறேன். ஈவேரா பெரியார் ஒரு சிறந்த ரோல் மாடல் கருதுகிறேன். திரைப்படத் துறையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் நான் சினிமா பார்ப்பேன். சிவாஜியின் கனவை நான் நிறைவேற்றினேன். எனது கனவு இனிமேல்தான் நிறைவேற்றப்பட வேண்டும் ஹாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையெல்லாம் கிடையாது. அமெரிக்கர்கள் இந்திய படத்தில் நடித்து இந்திய நாட்டின் விருதை அவர்கள் வாங்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அது விரைவில் வரவேண்டும் என்றார்.

No comments:
Post a Comment