February 22, 2010

அஜீத் தீவிர ஆலோசனை

திரையுலக சங்கங்களின் மிரட்டலுக்கு பணிந்து வருத்தம் தெரிவிப்பதா அல்லது துணிச்சலாக தன் வழியைத் தொடர்வதா என்று அஜீத் தனது ரசிகர்களுடன் இணைந்து ஆலோசனை செய்து வருகிறார்.


நடிகர், நடிகைகளை விழாக்களுக்கு நிர்ப்பந்த படுத்தியும், மிரட்டியும் அழைப்பதாக அஜீத் பேசியது சர்ச்சையை கிளப்பியது. ரஜினியும், அஜீத்தின் இந்தக் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த வகையில் எழுந்து கைத்தட்டினார்.

பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கலைப்புலிசேகரன் ஆகியோர் இருவரையும் கண்டித்தனர். ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கமும் கடுமையாக விமர்சித்தார்.

இந்த நிலையில் திரைப்பட சங்கங்களின் கூட்டு கூட்டம் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன் தலைமையில் நடந்தது. இதில் ரஜினி, அஜீத் கருத்துக்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

அஜீத் பேச்சு உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். ரஜினிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தீர்மானத்தின்படி அஜீத் வருத்தம் தெரிவிப்பாரா? என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. அவர் நடித்த அசல் படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண் டிருக்கிறது. அடுத்த புது படத்துக்கு தயாராகி வருகிறார். இந்தப் படத்தைத் தயாரிப்பவர் முதல்வர் கருணாநிதி யின் பேரன் தயாநிதி அழகிரி என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்பட சங்கம் கூட்டுக் கூட்டத்தின் முடிவு பற்றி அஜீத் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.

ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள், ஆதரவாளர்கள் போன்றோருடன் ஆலோசித்து வருகிறார். விரைவில் தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் அஜீத் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிப்பார் என்று நடிகர் சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் அஜீத் ரசிகர்கள் பெரும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளனர்.

No comments: