தமிழ் சினிமா துறையினருக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கிய முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழ் திரையுலகினர் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், பிப்ரவரி 6ம்தேதியன்று (சனிக்கிழமை) பிரம்மாண்ட விழா நடைபெற்றது.
"பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு அபிதாப் பச்சன் தலைமை வகித்தார். இதில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் முதற்கொண்டு தமிழ் திரையுலகமே திரண்டு வந்திருந்தது.
இந்த விழாவில் கலந்து கொண்டு நடிகர் அஜீத்குமார் பேசியதாவது:
இந்த விழாவில் முதல்வர் கலைஞர் மீதான அன்பும், மரியாதையும் நான் வைத்திருப்பதால் வந்துள்ளேன். ஆனால் சில நிகழ்ச்சிகளுக்கு நடிகர்கள் கட்டாயம் வர வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். காவிரி பிரச்சனை போன்ற அண்டை மாநிலங்களுடன் பிரச்சனை என்றால் நடிகர்கள் வந்து போராட வேண்டும் என்று மிரட்டுகிறார்கள்.
ஆனால் நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்தால் எதிர்க்கிறார்கள். எனக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை இல்லை. நடித்து முன்னேற வேண்டும் என்றுதான் ஆசை. நடிகர்களுக்கு வரும் மிரட்டல்களை முதல்வர்தான் தீர்க்க வேண்டும்.
நடிகர்களை நடிக்க விடுங்கள். அரசியலையும் சினிமாவையும் ஒன்று சேர்க்காதீர்கள். சினிமாவில் அரசியலை புகுத்தாதீர்கள். காவிரி பிரச்சனை போன்ற அண்டை மாநிலங்களுடனான பிரச்சனையை தீர்க்க அரசாங்கம் இருக்கிறது.
நடிகர்களால் என்ன செய்ய முடியும். யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களை அனுசரித்துத்தான் செல்ல முடியும். மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் போராடுவார்கள்.
தமிழ் திரையுலகத்துக்கு கலைஞர் செய்துள்ள உதவிக்கு, நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும், நன்றி விசுவாசத்திலும் தான் நாங்கள் அனைவரும் இங்கு வந்துள்ளோம். நான் மட்டுமல்ல தமிழ் திரையுலகமே முதல்வர் மீது மரியாதை வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
அஜீத்தின் இந்த பேச்சுக்கு ரஜினி எழுந்து நின்று கை தட்டினார். இந்த சம்பவத்தால் கடுப்பு அடைந்த முதல்வர் ஆதரவு வட்டாரம் நேரடியாகவும், மறைமுகமாகவும் கண்டித்தனர்.
தற்போது இந்த நிகழ்ச்சியின் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது என்றும் கலைஞர் டி.வி.க்களில் விளம்பரம் வந்தது. இதில், அஜீத்குமார் பெயரை மட்டும் திட்டமிட்டு குறிப்பிடவில்லை. இது அவர்களின் கோபத்தையே காட்டியது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் இல்லத்தில் நேரடியாக சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், "தன் மகள் நிச்சயதார்த்திற்கு வந்த முதல்வருக்கு நன்றி சொல்லவே வந்தேன்" என்றும், "அஜீத் குறிப்பிட்டதுபோல யாரையும் மிரட்டவில்லை" என்றும் குறிப்பிட்டார்.
இதன்பின்னர், அஜீத்குமார் முதல்வர் இல்லத்திற்கு வந்தார். அஜீத் மரியாதை நிமித்தமாகவே சந்தித்ததாக முதல்வர் வட்டாரம் தெரிவித்தது.
கடந்த 4 ஆண்டுகளாக எத்தனை பாராட்டு விழாக்கள். இவை அனைத்திலும் நடிகர்- நடிகர்கள் கலந்து கொண்டு ஆடி - பாடி மகிழ்கிறார்கள். அதை வியாபாரமாக்கும் வேலையில் கலைஞர் டி.வி.யும் செயல்பட்டு வருகிறது.
இது எப்படியோ நடிகர் அஜீத் பேச்சு முழுமையாக ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும்.... இது அவர்களின் உள்ளக்குமுறல்.... யார் எப்படி சொன்னாலும் இது நிஜம்....


1 comment:
பாவம் அஜித் அசல்லும் நகல் ஆகி போனதால் இனி முடைகடவண்டேஜதுதன் பவம் "ஜால்ரா போடுபவர்"
Post a Comment