
மதுரை மாவட்ட ஆட்சியர் ந.மதிவாணன் தலைமையில் பாலமேட்டில் ஜனவரி 15அன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் பி.மூர்த்தி முன்னிலையில் துவங்கியது.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜனவரி 15அன்று நடைபெற்றது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் மாடுகள் பரிசோதனை, மாடுகளை பிடிக்க வந்திருந்தவர்கள் சோதனை, காலரிகள், தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, கால்நடைத்துறை, மருத்துவத்துறை விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினர் உள்ளிட்டவர்கள் கண்காணித்தனர்.
மதுரை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் இரண்டு கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், ஆறு துணை கண்காணிப்பாளர்கள், 40 ஆய்வாளர்கள், 80 துணை ஆய்வாளர்கள், சுமார் ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஜல்லிக்கட்டில் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 603 காளைகள் பதிவுசெய்யப்பட்டு கலந்து கொண்டன . சுமார் 200 வீரர்கள் காளைகளை பிடித்தனர். மாடுகளை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.கோவில்பட்டியைச் சேர்ந்த விஜயன்(25) உட்பட 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் விஜயன் பரிதாபமாக உயிரிழந்தான். பாதுகாப்பு வளையம் அருகே பாதுகாப்பு பணியில் நின்றிந்த போலீஸ்காரர் ஒருவரை காளை தூக்கிவீசியது. இதில் அந்த போலீஸ்காரர் காயமடைந்தார்.
உலகப் புகழ் பெற்றது என்றழைக்கப்படும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் ஜனவரி-16அன்று நடைபெறுகிறது. உள்நாட்டு-வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளைஅழைத்துச் செல்ல தமிழ்நாடு சுற்றுலாத்துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.





No comments:
Post a Comment